2025 மே 17, சனிக்கிழமை

யாழ். மாணவர்கள் கல்விக்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றார்கள் - யாழ்.ஆயர்

Menaka Mookandi   / 2012 மார்ச் 15 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.மாணவர்கள் கல்விக்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றார்கள் அவர்களின் கல்வித்திறன் அபாரிதமாக இருப்பதாக யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

யாழ். வேம்படி மகளிர் பாடசாலையின் இன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற 'மகிழ்ச்சியான வாழ்வு' என்னும் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

இவர் மேலும் உரைநிகழ்த்துகையில், மாணவர்களின் எதிர்காலக் கல்விக்கு புத்தகங்கள் சிறந்த நண்பர்களாக இருக்கிறது. கல்வித்துறையில் மகிழ்ச்சியான வாழ்வு ஏற்படுகின்றது.

எல்லோரும் மகிழ்ச்சியை விரும்புகின்றோம் அனைத்து மதங்களும் மகிழ்ச்சியாக வாழ்வதற்குரிய வழிவகைகளை சொல்லிக் கொடுக்கின்றது. உண்மையில் யாழ்.மாணவர்கள் கல்வியில் காட்டகின்ற ஆர்வம் அவர்களின் எதிர்காலத்தை பிரதி பலிக்கின்றனவாக இருக்கின்றது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .