2025 மே 17, சனிக்கிழமை

யாழ் இ.போ.ச ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு

Menaka Mookandi   / 2012 மார்ச் 16 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இலங்கை போக்குவரத்து சபை யாழ். பிராந்திய ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் யாழ். குடாநாட்டுக்கான இ.போ.சா பஸ்கள் இன்று வெள்ளிக்கிழமை போக்குவரத்தில் ஈடுபடவில்லை.

சம்பள உயர்வு, ஊழியர் சேமலாப நிதி நன்மைகள், பணிக்கொடை என்பவற்றை வழங்கக்கோரி இவர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். பிராந்திய போக்குவரத்து செயலாற்று முகாமையாளர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.குடாநாட்டில் இ.போ.சா பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடாமையினால் பயணிகள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கினர். இதேவேளை தனியார் பஸ்களின் பயணிகள் அளவுக்கு அதிகமாக ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .