Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Super User / 2012 மார்ச் 16 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. தலைவர்கள் இன்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுடன் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தேசிய அமைப்பாளர் தயா கமகே, எம்.பி.க்களான ஜயலத் ஜயவர்த்தன, டி.எம். சுவாமிநாதன் ஆகியோரும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து;ளனர்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரை ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் வரவேற்றார்.
ரணில் விக்கிரமசிங்க நாளை யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன் மக்கள் சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஏற்பாட்டில் நாளை காலை சாவகச்சேரி, நெல்லியடி, பருத்தித்துறை ஆகிய பகுதிகளில் மக்களை சந்திக்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க பிற்பகல் வல்வெட்டித்துறைக்கும் விஜயம் செய்வார்.
செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு மதியம் செல்லும் ரணில் தலைமையிலான குழுவினர் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபடுவர். இதனையடுத்து நீர்வேலி மாதர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்திலும் இவர் பங்கேற்பார். சுன்னாகம், வலிகாமம் வடக்கு, மற்றும் மாதகல், மூளாய் அராலி, ஆகிய பகுதிகளில் இடம்பெறும் கூட்டங்களிலும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago