2025 மே 19, திங்கட்கிழமை

தனியார் கல்வி நிறுவனங்களை பதிவுசெய்ய யாழ். மாநகர சபை உத்தரவு

Super User   / 2012 மே 13 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ் மாநகர சபை எல்லைக்குள் பதிவில்லாமல் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களை மே மாதத்திற்குள் பதிவுசெய்யமாறு மேயர் யோகேஸ்வரி பற்குணராசா இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மாநகர சபையின் எல்லைக்குள் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்கள், கணிணி கற்கை, தொழில்நுட்ப பாடங்களை கற்பிக்கும் நிறுவனங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர்கள் ஆகியோரே பதிவு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் 71 கல்வி நிறுவனங்களே யாழ் மாநகர சபையில் பதியப்பட்டுள்ளது. ஏனைய கல்வி நிறுவனங்கள் எதிர்வரும் 31ம் திகதி வியாழக்கிழமைக்கு முன்னர் மாநகர சபையின் கலாசார பிரிவில் பதிவு செய்ய வேண்டும் என மேயர் தெரிவித்தார்.

குறித்த திகதிக்குள் பதிவு செய்ய தவறும் தனியார் கல்வி நிறுவனங்களுக்க எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர்  யோகேஸ்வரி பற்குணராசா மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X