2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை அரசாங்கம் தொடரவேண்டும்: யாழ். ஆயர்

Kogilavani   / 2012 மே 29 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                           (கவிசுகி)
தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சனை தீர்கப்படுவதற்காக அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்தையைத் தொடரவேண்டும் என யாழ்.ஆயர் தேமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய துதுவர் றொபின் மூடி குழுவினரை நேற்று இரவு யாழ்.ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'வடக்கில் இராணுவ பிரசன்னம் அதிகரித்திருப்பது கவலை அளிக்கின்றது. மக்களின் நிம்மதியான வாழ்வக்கு இதுவரை விடிவு கிடைக்கவில்லை. யாழின் அபிவிருத்தி மிகவும் துரித கதியில் நடைபெற்று வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இது வரவேற்கத்தக்க விடயம்.

மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் கொண்டு செல்வதினால் வறிய  மக்கள் உணவுபண்டங்களை வாங்க முடியாத நிலையில் மிகவும் போசாக்கற்றவர்களாக இருக்கின்றனர்.

மீள்குடியேற்றத்தில் முன்னேற்றங்கள் எற்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இருந்தும் யாழ்.இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்கள் அறவே இல்லாத நிலை காணப்படுகிறது.

சமூக கட்டமைப்புக்கள் மீளமைக்கப்பட வேண்டிய தேவை யாழில் எழுந்துள்ளது. மக்களின் மனதில் அமைதி ஏற்பட வேண்டும்; அன்றாடக் கருமங்களை மக்கள் செய்வதற்கு அவர்களிடம் பணம் இல்லை.

யாழில் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியது முக்கியமானது' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X