2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் யாழ். விஜயம்

Super User   / 2012 மே 30 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்மூகம் நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
மேற்கொள்ளவுள்ளார் என மாவட்டச் செயலளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வரும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் யாழ். குடாநாட்டின் தற்போதைய நிலமைகள் தொடர்பாக யாழ். நூலகத்தில் நாளை காலை 10 மணிக்கு அரச அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன், வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை சந்தித்து மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளார்.

யாழ். மாநகரில் நிர்மாணிக்கப்படவுள்ள வீதி சமிக்ளை விளக்குகள் தொடர்பில் யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜாவை சந்தித்து சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் ஆராயவுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X