2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

களவாக மின்சாரம் பெற்றவர்களுக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2012 மே 31 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

களவாக மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் தண்டம் விதித்து மல்லாகம் நீதவான் தீர்ப்பளித்தார்.

கைதுசெய்யப்பட்ட இவர்கள்  மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் தெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது அவரவரின் குற்றத்தின் தன்மைக்கேற்ப 8,500 ரூபாவிலிருந்து 20,000 ரூபா வரை தண்டம் விதிக்கப்பட்டது. அவர்கள் தண்டப்பணத்தையும் செலுத்தினர்.

கொழும்பிலிருந்து வந்த மின்சார சபையின் விசேட பிரிவினரும் தெல்லிப்பளை பொலிஸாரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, களவாக மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் 2 பெண்கள் உட்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். கட்டுவன், தெல்லிப்பளை, மல்லாகம,; அளவெட்டிப் பகுதிகளில் இச்சோதனை நடவடிக்கை கடந்த  திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X