2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் மர்மப்பொருள் வெடித்து சிறுவன் பலி

Suganthini Ratnam   / 2012 ஜூன் 04 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                                                                                              (கவிசுகி)

யாழ்ப்பாணம், நயினாதீவு மயிலடி கடற்கரைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை மர்மப்பொருளொன்று வெடித்ததில் சிறுவனொருவன் பலியாகியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நயினாதீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நயினாதீவு கணேச வித்தியாலயத்தில் கல்வி கற்கும் எஸ்.றூபன்     (வயது 15) என்ற சிறுவனே இவ்வாறு பலியாகியுள்ளான்.

கடற்கரையில் ஒதுங்கிக் கிடந்த இம்மர்மப்பொருளை எடுத்து விளையாடியபோது அது வெடித்ததில் படுகாயமடைந்த இச்சிறுவன், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இச்சிறுவனின் தலையிலும் நெஞ்சுப்பகுதி மற்றும் கை, கால்களிலும் காயமேற்பட்டுள்ளன. 

இந்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X