2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாஷையூரில் பிறந்த சிசுவை வீசி தலைமறைவாகியிருந்த தாய்க்கு பிணை

Menaka Mookandi   / 2012 ஜூன் 05 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். பாஷையூர் பற்றிமாதா தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியிலிருந்து பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்றை கடந்த 21ஆம் திகதி கைவிட்ட தாயார் கைது செய்யப்பட்டு இன்று செவ்வாய்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் யாழ்.பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்டார்.

குழந்தையைக் கைவிட்டு விட்டு தலைமறைவாக இருந்த தாயரை யாழ்.பொலிஸார் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது 30,000 ரூபா ஆள்பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார் யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா. 

கடந்த மே 21ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டதாக சிறுவானது யாழ்.போதனா வைத்தியசாலையில் தாதியர் உத்தியோகத்தர்களினால் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X