2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள் ஆர்பாட்டம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 06 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)

யாழ். போதனா வைத்தியசாலை அரச தாதியர் சங்கம், துணை மருத்துவ சங்கம் மற்றும் இணை மருத்துவ சங்கத்தினர் இணைந்து இன்று புதன்கிழமை நண்பகல் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

மருத்துவ சேவையில் இருக்கும் தங்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள், இடைக்கால கொடுப்பனவுகள் கொடுக்கப்படாமையைக் கண்டித்து ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணிநேரம் யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 'மேலதிக கொடுப்பனவின் வீதத்தை அதிகரி', நாடு ரீதியாக சேவை செய்ய அனுமதி' தொலைபேசிக் கட்டனத்தை 4000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி கோஷங்கள் எழுப்பினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X