2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச கடல் எல்லையில் வடகடல் தொழிலாளர்களும் மீன்பிடிக்கும் நடைமுறையை ஏற்படுத்த திட்டம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 06 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


சர்வதேச கடல் எல்லைக்கு சென்று வடகடல் தொழிலாளர்களும் மீன்பிடிப்பதற்கான நடைமுறையை ஏற்படுத்துவதற்கு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களின் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் நடவடிக்கை எடுக்கும் என அதன் புதிய தலைவர் எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களின் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற முதலாவது நிர்வாக கூட்டத்தில் கன்னியுரையாற்றும் போது அவர் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'யாழ். மாவட்டத்தின் கடற்றொழில் சார்ந்த நடவடிக்கைகள் எதுவானாலும் தங்கள் சம்மேளனத்திற்கு தெரியாமல் மேற்கொள்ள முடியாது. சர்வதேச கடலில் தங்கிச் தொழில் செய்யும் 'பலநாள் கடல்' தொழிலில் வடகடல் தொழிலாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

எங்களது சமாசத்திற்கு சொந்தமாக பலநாள் கடல் கலம் நீர்கொழும்பில் இருப்பதாகவும் அவற்றில் வடகடல் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து தொழில் வளத்தைப் பெருக்கி பொருளாதார ரீதியில் வடமாகாணத்தை கொண்டு வருவதற்கு சம்மேளனம் நடவடிக்கை எடுக்கும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X