2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் வறிய விவசாயிகளின் தேவைகளை நிறைவு செய்ய நடவடிக்கை: மாவட்ட செயலர்

Menaka Mookandi   / 2012 ஜூன் 07 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் வறிய நிலையிலுள்ள விவசாயிகளின் தேவைகளை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயம் தெரிவித்துள்ளதாக யாழ்.மாவட்ட விவசாயிகள் சம்மேளனம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் விவசாய சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் அரச அதிபருக்குமிடையில் விசேட சந்திப்பு யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன் போது விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதுடன் ஏழ்மை நிலையில் வாழும் விவசாயிகளின் தேவைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

விவசாயிகளின் காணிகள் தொடர்பாகவும், விளைநிலங்கள் மற்றும் உரமானியங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட விவசாயிகள் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்காலத்தில் விவசாயத்தில் யாழ்.மாவட்டம் தன்னிறைவு அடைவதற்குரிய நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு யாழ்.மாவட்டச் செயலளர் சுந்தரம் அருமைநாயகம் தங்களைக் கேட்டுக் கொண்டுள்ளதாக யாழ்.மாவட்ட விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X