2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சுன்னாகம் சந்தைத் தொகுதி திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 08 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)


30 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட சுன்னாகம் பஸ் நிலையப் பகுதியிலுள்ள சந்தைக் கட்டிடத் தொகுதி நேற்றுமுன்தினம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இச்சந்தைத் தொகுதி பல பிரிவுகளையும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.

வலி. தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராசா பிரகாஸ்  இச்சந்தைத் தொகுதி கட்டிடத்தை திறந்துவைத்தார். 

வலி. தெற்கு பிரதேச சபையின் செயலாளர் சுலோஜனா முருகநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சபையின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X