2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் மாற்று வலுவுடையோருக்கான வீடமைப்பு உதவுத்தொகை, உபகரணங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 ஜூன் 08 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி, எஸ்.கே.பிரசாத்)


சமூக சேவை அமைச்சினால் மாற்று வலுவுடையோருக்கான வீடமைப்பு உதவுத்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் சமூக சேவை அமைச்சர் பிலீக்ஸ் பேரேரா கலந்து கொண்டு மாற்று வலுவுள்ளோர்களுக்கான உதவித் தொகையினை வழங்கி வைத்தார். யாழ் மாவட்டத்தில் தெரிவிவு செய்யப்பட்ட 50  பயனாளிகளுக்கு வீடமைப்ப்பதற்காக 250,000 ரூபா வழங்ப்பட்டது.

அத்துடன் மஹிந்த சிந்தனையின் கீழ் 2012ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட 70 வயதிற்கு மேற்பட்ட முத்த பிரஜைகளுக்கான மாதாந்த உதவித் தொஇகையான 1000 ரூபா வழங்கும் திட்டமும் இன்று ஈரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக யாழ் பிரதேச செயலகத்திற்குட்ட 200 பேருக்கு 1000 ரூபா வைப்பிலிடப்பட்ட வங்கிப்புத்தகம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமூக சேவை அமைச்சர் பிலீக்ஸ் பேரேரா, சமூக சேவை அமைச்சின் செயலாளர் ரட்ணயக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, யாழ அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம், மற்றும் யாழ் மாவட்ட சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் அங்கஜன், பிரதேச செயலாளர்கள், சமூக சேவை உத்தியோகஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X