2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மாற்று வலுவுடையோருக்கான வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Menaka Mookandi   / 2012 ஜூன் 08 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


சமூக சேவை அமைச்சினால் மாற்று வலுவுடையோருக்கான வீடமைப்புத் திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வீடமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை உடுவில் பிரதேச செயலர் பிரிவில்இடம்பெற்றது.

இன்று காலை 9.55 மணிக்கு உடுவில், மல்வம் பிரதேசத்தில் உள்ள மாற்றுவலுவுள்ள பன்னீர் செல்வம் என்பவருக்கு வீடமைப்பதற்கான அடிக்கல்லினை சமூக சேவை அமைச்சர் பிலீக்ஸ் பேரேரா, யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் நாட்டிவைத்து அவர்களுக்கான 250,000 காசோலையும் வழங்கினர்.

நிகழ்வில் சமூக சேவை அமைச்சர் பிலீக்ஸ் பேரேரா, சமூக சேவை அமைச்சின் செயலாளர் ரட்நாயக்கா, யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் உடுவில் பிரதேச செயலர், சமூக சேவை உத்தியோகஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X