2025 மே 19, திங்கட்கிழமை

பெறப்பட்ட சுதந்திரத்தை வடக்கு மக்களும் அனுபவிக்க வேண்டும்: அமைச்சர் பீலிக்ஸ்

Menaka Mookandi   / 2012 ஜூன் 08 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)

'நாங்கள் பெற்ற சுகந்திரத்தை வடக்கு மக்களும் அனுபவிக்க வேண்டும் அதற்காகவே நாங்கள் சமூகத்தில் பல வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றோம்' என்று சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார்.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் சமூகசேவை அமைச்சினால் விசேட தேவையுடையவர்களுக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக சமூகசேவை அமைச்சு பல சேவைகளை வழங்கி வருகின்றது. சமூகசேவை அமைச்சினுடாக 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மாதா மாதம் 1000 ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 1000 ரூபாவை 1500 ரூபாவாக அதிகரிப்பதற்கு ஆலோசித்து வருகின்றோம்.

சாதாரண மக்கள் அவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு சமூகசேவை அமைச்சு விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இன மத பேதமின்றி சமூகசேவை செய்கின்றது எங்களுடைய அமைச்சு.

வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட வலுவிழந்த மக்களின் எதிர்கால வாழ்வுக்காக தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு முயற்சித்து வருகின்றோம். நாங்கள் பெற்ற சுகந்திரத்தை வடக்கு மக்களும் அனுபவிக்க வேண்டும் அதற்காகவே நாங்கள் சமூகத்தில் பல வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றோம்' என்றார்.

இதனை அடுத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி,

'நாட்டில் சித்த சுயாதீனமுற்றவர்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு சேவையாற்ற தங்கள் அமைச்சு முன்வந்து செயற்பட வேண்டும் எனவும் வடக்கில் யுத்ததினால் பாதிக்கப்பட்டு வலுவிழந்து இருக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செயற்திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X