2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புள்ளி அடிப்படையில் இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவு

Kogilavani   / 2012 ஜூன் 09 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)
இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டத்திற்கு தெரிவான பயனாளிகளின் பெயர் விபரங்கள் பிரதேச செயலகம் மற்றும் கிராம அலுவலர் பிரிவுகளில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதில் இறுதித் தெரிவானது புள்ளி அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

30 வருட காலத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் இந்த திட்டத்திற்குள்ள உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள் இருந்தாலும் இறுதித் தெரிவில் அதிக புள்ளிகள் பெறும் அடிப்படையிலேயே இந்தத்திட்டம் வழங்கப்படும் என்று பிரதேச செயலகங்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பெண்கள், விதவைகள், தாய் தந்தையரை இழந்தவர்கள், முதியவர்கள் கொண்ட குடும்பங்களில் 12 வயதிற்கும் 20 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு 20 புள்ளிகளும் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இருந்தால் அவர்களுக்கு 30 புள்ளிகளும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் வன்னியில் இருந்து மீளக்குடியேறிய போது 20,000 ஆயிரம் உதவித் தொகைபெற்றிருந்தால் அவர்களுக்கு 20 புள்ளிகளும் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக இருந்தவர்களுக்கு 30 புள்ளிகளும் வழங்கப்படவுள்ளன.

இந்த புள்ளி வழங்கும் திட்டத்தால், 2009 ஆண்டு யுத்தத்திற்குப் பின்னர் வன்னியில் இருந்து மீளக்குடியேறிய மக்கள் இந்த வீட்டுத்திட்டத்தை இழக்கும் நிலை ஏற்படலாம் என  மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மீளக்குடியேறிய மக்கள் அனைவரும் 20,000 ஆயிரம் உதவித் தொகைபெற்றிருப்பதால் புள்ளி அடிப்படையில் பின்னுக்கு தள்ளப்படும் நிலை ஏற்படும் இதனால் வீட்டுத்திட்ட இறுதித் தெரிவில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X