2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். சிறுவர் நீதிமன்ற நீதிபதியாக ஜீவராணி நியமனம்

Super User   / 2012 ஜூன் 11 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் புதிதாக நிறுவப்பட் சிறுவர் நீதிமன்றத்தின் நீதிபதியாக க.ஜீவராணி நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்

யாழ். மாவட்ட நீதிபதி மாணிக்கவாசனர் கணேசராசவின் வேண்டுகோளின் பிரகாரம் யாழ். சிறுவர் நீதிமன்றத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 18ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் சிறுவர் நீதிவான் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்

சிறுவர் நீதிமன்றம் தொடர்ச்சியாக ஜந்து நாட்களும் நடைபெற வேண்டுமெனவும் அதற்கு பெண் நீதிபதியொருவரே பொருத்தமானவர் எனவும் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு யாழ். மாவட்ட நீதிபதி மாணிக்கவாசனர் கணேசராசா தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, மல்லாகம் மேலதிக நீதிவானாகவும், மேலதிக மாவட்ட நீதிபதியாகவும் கடமையாற்றும் க.ஜீவராணியை யாழ். சிறுவர் நீதிமன்ற நீதிபதியாக நீதிச்சேவை ஆணைக்குழு நியமித்துள்ளது

இதேவேளை, யாழ். முஸ்லிம்களின் விவகாரத்து தொடர்பான பிரச்சனைகளை யாழிலேயே தீர்வு காணும் பொருட்டு காதி நீதிமன்றம் ஒன்றை உருவாக்கவும் யாழ். நீதிவான் நீதி அமைச்சுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

யாழ். முஸ்லிம் கல்விமான்கள் மற்றும் பொதுமக்களது வேண்டுகேளை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X