2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கட்டுத்துவக்கு வெடித்து இளைஞன் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2012 ஜூன் 11 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். வடமராட்சி கிழக்கு கோவில் முள்ளியான் பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

தர்மலிங்கம் பிரதீபன் (வயது 21) என்ற இளைஞன் மான் வேட்டைக்கு சென்ற வேளை காட்டில் வைக்கப்பட்டு இருந்த கட்டுத்துவக்கு வெடித்ததில் படுகாயங்களுக்கு இலக்கான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் கூறினர்.

மிருக வேட்டைக்காக கட்டுத் துவக்கை காட்டில் வைத்தவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X