2025 மே 19, திங்கட்கிழமை

தங்கச் சங்கிலி திருடிய பெண்ணுக்கு ஒரு வருட கடூழிய சிறை

Super User   / 2012 ஜூன் 12 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். அரியாலை பகுதியில் மூன்று பவுண் தங்க சங்கிலி திருடிய பெண்ணுக்கு ஒரு வருட கடூழிய சிறை தண்டனையை யாழ். நீதிமன்ற நீதிவான்; மா.கணேசராச இன்று செவ்வாய்கிழமை வழங்கியுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு மே 09ஆம் திகதி வீடொன்றில் குறித்த பெண் பணிப் பெண்ணாக இருந்து வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த நிலையில் தங்கச் சங்கிலியைத் திருடி தலைமறைவாகியுள்ளார்.

யாழ். பொலிஸாரின் தேடுதலின் போது கைது செய்யப்பட்ட குறித்த பெண் குற்றவாளி என நீதிமன்றம் இனம் கட்டுள்ளதினால் இவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனையை யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச வித்தார்.

இக்குற்றவாழிக்கு எதிராக மூன்று திருட்டு வழக்குகள் யாழ். நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக நீதிமன்ற பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X