2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் டெங்கு நோயின் தாக்கம் குறைவடைந்துள்ளது: ஆ.கேதீஸ்வரன்

Kogilavani   / 2012 ஜூன் 13 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(டானியல்)
யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் முழுமையாக குறைவடைந்துள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழில் அதிகரித்த நிலையில் இருந்த டெங்கு நோயின் தாக்கம் கடந்த மூன்று மாதங்களில் முழுமையாக குறைவடைந்துள்ளது. பிரதேச சுகாதார சேவையாளர்களின் கடினமான நடவடிக்கையின் காரணமாக இந்த டெங்கினை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

யாழில் நுளம்பு பெருகும் விதமாக சுற்றுச் சூழலை வைத்திருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாகவே யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் பூரணமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, சுற்றுச் சூழலை நுளம்பு பெருகும் விதமாக வைத்திருந்தவர்கள் 26 பேருக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்;.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X