2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காலவாதியான பால்மா, அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை வர்த்தகர்களுக்கு அபராதம்

Super User   / 2012 ஜூன் 13 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலவாதியான பால்மா மற்றும் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த நான்கு வர்த்தகர்களுக்கு மல்லாகம் நீதவான் நீதமன்றம் 9,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.

சுன்னாகம் பகுதியில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் காலாவதியான பால்மா விற்பனை மற்றும் அரிசி, சீனி போன்ற பொருட்களை கட்டப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு விற்பனை  செய்தமை கண்டறியப்பட்டது.

இவ்வாறு விற்பனை செய்த வர்தர்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணை இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் நீதபதி கஜநீதிபாலன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி  காலாவதியான பால்மாவினை விற்பனை செய்த வர்தகர்களுக்கு தலா 1500 ரூபாவும், அரிசி மற்றும் சீனி ஆகிய பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்யத வர்தகர்களுக்கு தலா 3000 ரூபாவும் அபராதம் விதித்து திர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X