2025 மே 19, திங்கட்கிழமை

யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பு

Kogilavani   / 2012 ஜூன் 14 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல், எஸ்.கே.பிரசாத்)
யாழ்.மருத்துவ சங்க உறுப்பினரும் புற்றுநோய் பிரிவு வைத்திய அதிகாரியுமான என்.ஜெயக்குமாரின் வீடு இனம் தெரியாத நபர்களினல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் ஒரு நாள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் தங்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து  மருத்துவர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்

'இன்றைய தினம் ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றோம். நீதி கிடைக்க வேண்டும். மருத்துவரின் வீட்டை தாக்கியவர்கள் கைது செய்யப்படாவிட்டால் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் தொடரந்து பணிபகிஷ்கரிக்கில் ஈடுபடவுள்ளோம்' என யாழ்.மருத்துவ சங்கத் தலைவர் வைத்தியர் நிமலன் இதன்போது தெரிவித்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X