2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மருத்துவரின் வீட்டைத் தாக்கியோர் கைது செய்யப்பட வேண்டும்: வைத்தியசாலை பணிப்பாளர்

Menaka Mookandi   / 2012 ஜூன் 14 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். மருத்துவ சங்க உறுப்பினரும் புற்றுநோய் வைத்திய அதிகாரியுமான ஜெயக்குமாரனின் வீடு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விரைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர்களின் பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய தலமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேராவிடம் தாம் தொடர்பு கொண்டு கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யாழ்.மருத்துவர் சங்க உறுப்பினரின் வீட்டில் இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குல் மருத்துவ சமூகத்திற்கு விடுத்த அச்சுறுத்தலாக தாம் கருதுவதாக யாழ்.மருத்துவ சங்கத் தலைவர் வைத்தியர் நிமலன் தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை மாலை தங்களது ஒருநாள் பகிஷ்கரிப்பு போராடம் சார்ந்து ஊடக அறிக்கை விடுவதற்கு முன்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X