2025 மே 19, திங்கட்கிழமை

'குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து மனமாற்றம் அடையும்போது நீதி பரிபாலனம் இரக்கம் காட்ட முடியும்'

Suganthini Ratnam   / 2012 ஜூன் 15 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

   
குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள்; முற்றுமுழுதாக குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து மனமாற்றம் அடையும்போது நீதி பரிபாலனம் இரக்கம் காட்ட முடியும் என யாழ். நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜா தெரிவித்தார்.

யாழ். சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு பனை அபிவிருத்திச் சபையினால் மேற்கொள்ளப்படும் தொழிற்பயிற்சியின் ஆரம்ப நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'குற்றச் செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடுவது ஒரு தொழிலாக மாறியுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. பொருளாதாரப் பிரச்சினையே இதற்கு அடிப்படையாக காணப்படுகின்றது. ஏனையவர்களின் பொருட்களைப் பறித்து நன்றாக வாழலாம் என்ற சிந்தனை இருக்கக்கூடாது. ஏனையவர்களிடம் இருந்து பறிக்கப்படும் பொருட்கள் ஏதோவொரு வகையில் தீமை பயக்கும்.
ஒவ்வொருவரும் சுய உழைப்பால் சம்பாதிப்பதுதான் நிலைத்துநிற்கும்.

குற்றச் செயல்கள் செய்த பின்னர் நீதிமன்ற குற்றச்சாட்டில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் இறைவனின் பார்வை உங்கள் மீது வந்துகொண்டே இருக்கும். ஏதோவொரு இடத்தில் தண்டனை அனுபவிக்கவேண்டிய நிலை ஏற்படும்.

சந்தேக நபர்களாகிய நீங்கள் குற்றச் செயல்களை முற்றுமுழுதாக வெறுத்து அவற்றில் இருந்து விடுபட வேண்டும். அப்போதுதான் நீதிபரிபாலனம் உங்கள் மீது இரக்கம் காட்ட முடியும்' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X