2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காணி அபகரிப்புக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம்

Kogilavani   / 2012 ஜூன் 15 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)
அரச படையினரின் காணி அபகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஒன்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கவுள்ளதாக அதன் செயலாளர் செல்லையா கஜேந்திரன் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

'எதிர்வரும் 18 ஆம் திகதி யாழ்.பேரூந்து நிலையத்தில் காலை 10 மணிக்கு காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைச்சொத்தான காணிகளை அரச படையினர் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பல பிரதேசங்களை ஏப்பம் விட்டுள்ளனர். காணிகள் இல்லாமல் யாழ்.மக்கள் வீதிகளில் படுத்துறங்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எமது கணிகளை அரச படையினரிடமிருந்து மீள  பெறுவதற்காக தமது கட்சியால் இந்த கண்டன ஆர்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது' என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்லையா கஜேந்திரன் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X