2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'மக்களுக்கு சிறந்த சேவைகள் கிடைப்பதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் செயற்பாடே காரணம்'

Menaka Mookandi   / 2012 ஜூன் 15 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிறப்பான செயற்பாடே ஏனைய துறைகள் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதற்கு காரணம் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தப்படுத்தல் பணிப்பாளர் சமிந்த சமரக்கோன் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபை, போக்குவரத்துச் சபை போன்றன மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவையாற்றி வருகின்றன. இந்தச் சேவைக்கு பெற்றோலித்துறையே காரணமாக இருக்கின்றது. அத்துடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகளுக்கு எமது பங்கு முக்கியமானதாகும் என்றார்.

எரிபொருள் விற்பனையில் கொழும்பு முன்னணி வகிக்கின்றது. யாழ்ப்பாணம் 8ஆவது இடத்தில் உள்ளது என்றார்.

அத்துடன் இலங்கையில் உள்ள 141 எரிபொருள் நிலையங்களினால் மாதாந்தம் கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் மண்ணெண்ணெய், டீசல் என்பன வழங்கப்பட்டு வருகின்றது.

யுத்தத்திற்குப் பின்னர் வடபகுதிகளில் நவீன வசதிகள் கொண்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X