2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பு

Menaka Mookandi   / 2012 ஜூன் 16 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)


யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியினால் குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு குருதி கொடுத்து உயிர்காத்த சுமார் 100 பேருக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். அத்தோடு யாழ்.போதனா வைத்தியசாலை குழந்தை வைத்திய நிபுணர் முகுந்தன், மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கி அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது கருத்து தெரிவித்த யாழ். வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா,

'உயிர் காக்கும் உன்னத பணியாளர்களாக குருதிக் கொடையாளர்கள் இருப்பது யாழ்.மண்ணின் பெருமையைக் காட்டுகிறது. மனித நேயமற்றவர்கள் வாழ்கின்ற இந்த உலகில் உதிரம் ஈர்ந்து மனித உலகத்தைக் காக்கும் மகத்தான பணியை குருதிக் கொடையாளர்கள் செய்து கொண்டு வருகின்றார்கள்.

ஆண்டுதோரும் பல தடவைகள் மனித உயர்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பவர்கள் வெளி உலகத்திற்கு தெரியாத உத்தமர்கள். அவர்கள் நிச்சயம் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்.

மனிதம், மனித நேயமுடையவர்கள் குருதிக் கொடையாளர்கள். அவர்களின் குருதியில் இன்று எத்தனையோ மனித உயிர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. மனிதநேயப் பண்புகள் எல்லாரிடத்திலும் வரமுடியாது. பிறருக்காக தங்களை அர்பணிக்கின்ற மகத்தான மனிதர்கள் குருதிக் கொடையாளர்கள்ஷ' என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X