2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'யாழ்.வைத்தியரின் வீட்டை தாக்கிய சந்தேக நபர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்'

Kogilavani   / 2012 ஜூன் 16 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

யாழ்.வைத்தியர் சங்க உறுப்பினரும் புற்றுநோய் வைத்திய நிபுணருமான எஸ்.ஜெயக்குமாரனின் வீட்டைத் தாக்கி சேதமாக்கிய சந்தேக நபர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஈ.எல்.பெரேரா தெரிவித்தார்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

யாழில் இந்து கோயில்களில் சாமி வாகனங்கள் திருடப்பட்டவை தொடர்பாக 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு இன்னும் இரண்டு சந்தேக நபர்களைப் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களையும் கைது செய்வோம்.

யாழ்.பிராந்தியத்தில் பாரிய களவு நடவடிக்கையில் ஈடுப்பட்ட முல்லைத்தீவைச் சேந்த ஒரு குழுவினரைத் தேடி முல்லைத்தீவுக்கு விசேட பொலிஸ் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் முகமாக இரவு ரோந்து நடவடிக்கையின் போது நீதிமன்ற பிடியானை பிறப்பிக்கப்பட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் மதுபோதையில் வாகனங்களை செலுத்தி உயிராபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தோடு மதுபோதையில் சென்ற 13 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் யாழ்.பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.சிறிகுகநேசன், சுன்னாகம், இளவாலை, மானிப்பாய் ஆகிய பொலிஸ் பகுதிகளை சேந்த உப பரிசோதகர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X