2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆணைக்கோட்டையில் வீடொன்றில் தீ விபத்து

Suganthini Ratnam   / 2012 ஜூன் 17 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ்ப்பாணம், ஆணைக்கோட்டை அரசடிச் சந்தியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக அவ்வீட்டின் ஒருபகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

மின்னொழுக்கு காரணமாகவே இத்தீ விபத்து ஏற்பட்டதாக அவ்வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். நேற்றையதினம் பூராகவும் மின்வெட்டு அமுலிலிருந்ததாகவும் பின்னர் மாலை 6 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டபோது வீட்டின் ஒரு பகுதியில் தீ பரவியதாகவும் அவர் கூறினார். உறவினர்களின் உதவியுடன் தீயை அணைத்ததாகவும் வீட்டு உரிமையாளர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X