2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நில அபகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.கூ. ஆதரவளிக்கத் தீர்மானம்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 17 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ்ப்பாணத்தில் நாளை திங்கட்கிழமை நடத்தப்படவுள்ள நில அபகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முழு ஆதரவையும் வழங்கத் தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  ஜனநாயக மக்கள் முன்னணி  தனது ஆதரவைத் தெரிவித்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த ஆர்பாட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 100 வீத பங்களிப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதுடன்,  தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்த  பாரம்பரிய காணி நில அபகரிப்பு வேலைத்திட்டத்தை வடபகுதி எங்கும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்த அபகரிப்பு எதிராக எவர் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை வழங்கும். அத்துடன் இது ஒரு பொதுவான பிரச்சினை. தமிழ்;க் கட்சிகள்  கொள்கை ரீதியாக பிரிந்திரிந்திருந்தாலும் அநீதிக்கு எதிரான போராட்டம் என்று வரும்போது கட்சி பேதங்களை மறந்து செயற்படுவதே சிறந்தது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சகல மாநகரசபை, நகரசபை, பிரதேசசபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார். பொதுமக்களையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X