2025 மே 19, திங்கட்கிழமை

காணி அபகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நீதிமன்ற உத்தரவுக்கமைய இடைநிறுத்தம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 18 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல், எஸ்.கே.பிரசாத், கிரிஷன்)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் யாழ். பஸ் நிலையத்துக்கு முன்னால் நடத்தப்படவிருந்த காணி அபகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நீதிமன்ற உத்தரவுக்கமைய இடைநிறுத்தப்பட்டுள்ளது.

யாழ். பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு மனுவுக்கமைய இந்த அனுமதியினை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதனையடுத்து, குறித்த பஸ் நிலையப் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாது செய்வதற்காக அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்படி ஆர்ப்பாட்டம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் யாழ் அலுவலகத்துக்கு முன்னால் நடத்த ஏற்பாடாகியுள்ள நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் அவ்வலுவலகப் பகுதியை நோக்கிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X