2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நிரந்தர நியமனம் கோரி வன்னித் தொண்டர் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 18 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

தங்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி யாழ். வலயக் கல்வி அலுவலகத்தில் வன்னித் தொண்டர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்று திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

தங்களுக்கான நிரந்தர நியமனங்கள் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லையென்பதுடன், கஷ்டப்  பிரதேசங்களில் கடமையாற்றியும் தங்களுக்கான நிரந்தர நியமனங்கள்; இன்னமும் வழங்கப்படவில்லையெனவும்; தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தங்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு பொறுப்பான கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X