2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். வைத்தியசாலையின் ஊழல், வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்காக இரு பொலிஸ் குழு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 18 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பிலும் யாழ். வைத்தியர் எஸ்.ஜெயக்குமாரின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பிலும்  துரித விசாரணை மேற்கொள்வதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வந்த விசேட பொலிஸ் குழுவினர் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.சிறிகுகநேசன் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்ட இரு விசேட  பொலிஸ் குழுக்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து விசாரணை மேற்கொண்டு அது பற்றிய முழுமையான அறிக்கையை யாழ். பிராந்திய பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த அறிக்கையின் உதவியுடன் வைத்தியரின் வீட்டைத் தாக்கிய சந்தேக நபர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.சிறிகுகநேசன் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X