2025 மே 19, திங்கட்கிழமை

மாநகர சபைக்கு சொந்தமான கடைகளை கைமாற்றம் செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்

Kogilavani   / 2012 ஜூன் 19 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே. பிரசாத்)

யாழ். மாநகர சபைக்கு சொந்தமான கடைகளை மாநகர சபையின் அனுமதியின்றி கைமாற்றம் செய்த உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு மாநகரசபை திர்மானித்துள்ளது.

உள்ளூராட்சிமன்றத் திணைக்களத்தின் சுற்று நிரூபத்தின் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாநகரசபையின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மாநகரசபை கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடலின் போதே ஆணையாளர் இந்த தகவலை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கடையின் உரிமையினை பெற்றவர்கள் இறந்திருப்பின் அந்த உரிமை மனைவிக்கு அல்லது அவரின் பிள்ளைகளுக்கு மாற்றம் செய்யமுடியும். ஆனால் பிறிதொரு நபருக்கு உரிமை மாற்றம் செய்யவிரும்பினால் மாநகரசபையின் அனுமதியுடனே மாற்றம் செய்யவேண்டும். அவ்வாறு அனுமதியின்றி உரிமை மாற்றம் செய்தால் அவர்களுக்கெதிராக மாநகரசபை சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்.

யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான 393 கடைகளில் 110 கடைகள் மாநகர சபையின் அனுமதியின்றி உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இக்கலந்துரையாடலில், மாநகரசபை அனுமதியின்றி உரிமை மாற்றம் செய்யப்பட்ட கடை உரிமையாளர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

இக் கலந்துரையாடலில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, மாநகர சபையின் ஆணையாளர், யாழ். வணிகர் சங்கத்தின பிரதிநிதிகள், மற்றும் வர்த்தகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X