2025 மே 19, திங்கட்கிழமை

வாகனங்களில் டெங்கு நோய் தொடர்பான ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூன் 19 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் எற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை வேலைத்திட்டத்தின் கீழ், டெங்கு நோயினை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை யாழப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டு இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தனர்.

யாழ். நகரப் பகுதி, அரச பேரூந்துகள், தனியார் பேரூந்துகள், முச்சக்கரவண்டிகள் என்பவற்றில் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X