2025 மே 19, திங்கட்கிழமை

பஸ்ஸிற்கு கல்லால் வீசிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூன் 19 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ்ப்பாணத்திற்கு வந்துகொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றிற்கு  கல்லுகளால் வீசி சேதமாக்கியதாகத் தெரிவிக்கப்படும் இருவர் கொடிகாமம் பொலிஸாரினால் இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பஸ் அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது கொடிகாமம் பகுதியில் கல்வீச்சுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இவர்கள் இருவரும் தனியார் வாகனச் சாரதிகள் எனவும்  இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட போக்குவரத்துப் பிரச்சினை காரணமாகவே குறித்த பஸ் மீது தாக்குதல் மேற்கொள்ளபட்டதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சந்தேக நபர்களை நாளை புதன்கிழமை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக கொடிகாமம்; பொலிஸார் குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X