2025 மே 19, திங்கட்கிழமை

காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் யாழில் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 19 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)


காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் 25 வருடங்களின்  பி;ன்னர் யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை மீண்டும் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் செயலக மாடியில் உள்ள இந்த அலுவலகத்தை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்;திரசிறி திறந்துவைத்தார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி புஞ்சிஹேவா இங்கு உரையாற்றுகையில்,

'காணி சீர்திருத்த ஆணைக்குழு கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில்  இயங்கியபோதிலும், யுத்தம் காரணமாக இயங்கமுடியாத நிலை ஏற்பட்டது. தற்போது யாழ்ப்பாணத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழு கொண்டுவரப்பட்டதன் மூலம் வடபகுதிகளைச் சேர்ந்த மக்கள் காணி சம்பந்தமான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்புக்கு அலைய வேண்டியது இல்லை. காணி சம்பந்தமான தேவைகள் பூர்த்தி செய்வதற்காக இம்மக்களுக்கு சுலபமாக்கப்பட்டுள்ளது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவானது ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் வழிகாட்டலுடன் இயங்குகின்றது.
காணி இல்லதாத மக்களுக்கு 20 பேர்ச் காணிகளை வழங்குவதுடன், விவசாய,  பயிர்ச் செய்கைகளுக்காக  காணிகள் குத்தகைக்கு விடப்படும். அத்துடன், உல்லாசப் பயணத்துறைக்கும் காணிகள் பகிர்ந்து அளிக்கப்படும்.

யாழ்ப்பாணத்தில்  சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமாக காணப்படுவதுடன், எதிர்காலத்தில் இந்தக் காணிகள் சிறந்த முறையில் பராமரிக்கப்படும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X