2025 மே 19, திங்கட்கிழமை

மீள்குடியேற்றக் கோரி மாதகல் மேற்கு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 19 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)


தங்களை மீள்குடியேற்றுமாறு கோரி மாதகல் மேற்கில் ஜெ. 162 கிராம மக்கள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கையில்,

கடந்த 1990ஆம் ஆண்டில் எமது கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்த நாங்கள் யுத்தம் முடிவடைந்த சூழலிலும் அகதிகளாக அலக்களிக்கப்படுகின்றோம். எங்கள் பகுதிகளில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றி எங்களை மீள்குடியேற்றுங்கள்' என்றனர். 

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற காணி சுவீகரிப்பு தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கை தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

இவர்களுக்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, உங்களின் மீள்குடியேற்றம் தொடர்பில்  ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்து நடவடிக்கை எடுக்கப்படும். நாளையே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்ப வேண்டாம் எனவும் காலப்போக்கிலேயே இதற்கான தீர்வு கிடைக்கும். அந்த வேளையில் நீங்கள் உங்கள் இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவீர்கள் எனக் கூறினார்.

தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமும் யாழ். மாவட்ட செயலரிடமும் ஆர்ப்பாட்டவர்கள் கையளித்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X