2025 மே 19, திங்கட்கிழமை

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வலிகாமம் வடக்கு மக்கள் ஆர்பாட்டம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 19 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல், கிரிசன், எஸ்.கே.பிரசாத்)


யாழ். வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் தங்களை மீள்குடியமர்த்துமாறு வலியுறுத்தி தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோயிலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று  செவ்வாய்கிழமை நடத்தினர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மக்களை மீளக்குடியமர்த்துமாறு கோரி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிறிதரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், இலங்கை தழிழரசுக் கட்சியினர், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X