2025 மே 19, திங்கட்கிழமை

காணி சுவீகரிப்பை நிறுத்தக்கோரி ஜனாதிபதிக்கு மகஜர்

Menaka Mookandi   / 2012 ஜூன் 19 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், ஜெ.டானியல்)

வலிகாமம் வடக்கு பகுதியில் விரைவாக மக்கள் மீள்கடியேற்றம் செய்யவும் இராணுத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி சுவீகரிப்பை நிறுத்தக்கோரியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வலிகாமம் வடக்கு மக்கள் சார்பாக வலிகாமம் பிரதேச செயலர் ஊடாக மகஜர் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த மகஜரின் பிரதியொன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜாவுக்கும் வழங்கப்பட்டது. வலிகாமம் வடக்கு மக்கள் சார்பாக வலிகாமம் வடக்கு பிரதேச சபைத்தலைவர் சுகிர்தன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலரிடம் வழங்கினார்.

குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கடந்த 22 வருடங்களுக்கு மேலாக சொந்த நிலங்களுக்கு போக முடியாமல் மக்கள் இன்றும் அகதி வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலைமையை மாற்றி இந்த மக்களுக்கு ஒருமாத காலத்திற்கு உரிய பதிலை வழங்க வேண்டும்.

59.5சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக்கொண்ட வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் 45 கிராம சேவையாளர் பிரிவில் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த மக்களை மீளக்கடியேற்ற வேண்டும் என்பதற்காக 2003ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கில் இடைக்கால தீர்பின் பிரகாரம் 2006ஆம் ஆண்டு மக்கள் குறித்த பகுதியில மக்கள் மிளக்குடியமர்த்தப்பட்டிருக்க வேண்டும்.

2011 ஆண்;டின் இறுதியில் இருந்து இன்றுவரை 21 கிராம சேவையாளர் பிரிவுகளிலேயே மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. எஞ்சியுள்ள 24 கிராம சேவையாளர் பிரிவுகளில் 37,000ற்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை.

அத்தடன் இந்தப்பகுதியில் உள்ள 25 சதுர கிலோ மீற்றர் வளமான வேளாண்மை நிலமும் கடல்பிரதேசமும் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது.

இந்தப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் 15 பிரதேச செயலகங்களில் உள்ள அகதி முகாம்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். ஆடிப்படை வசதிகள் பெறுவதிலும் பெரும் இடர்களை இந்த மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

போர் முடிந்து மூன்று ஆண்டுகளை கடந்தள்ள நிலையிலும் 14 கிராம அலுவலர் பிரிவுகளில் சில பகுதிகள் ஊடாக ஊடறுத்துச் செல்கின்ற மண் அணைகளும் கம்பிவேலிகளும் இராணுவத்தினர் நிறுவியுள்ளனர். இது அந்தப்பகுதி மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை எற்படுத்தியிரக்கின்றது.

அத்துடன் வலிகாமம் வடக்கின் ஒட்டகப்புலம், குரும்பசிட்டி போன்ற பகுதிகளில் 35 ஏக்கர் நிலப்பகுதியை கையகப்படுத்துவதற்கென இராணுவத்தினர் அறிவித்தல் கொடுத்துள்ளனர். அரச அதிகாரிகளை நிலத்தை தருமாறு நிற்பந்திக்கிறார்கள்.
இதனை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும்.

ஜனாதிபதி என்ற வகையில் ஒருமாத காலத்திற்குள் வலிவடக்கு மக்களை சொந்த இடத்திற்கு மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஜனாதிபதிக்கு மனுப்பிவைக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X