2025 மே 19, திங்கட்கிழமை

காணி சுவீகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் மீது கழிவு எண்ணெய் வீச்சு

Menaka Mookandi   / 2012 ஜூன் 19 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

நிலம் சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். வலிகாமம் வடக்கில் இன்று செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய பொதுமக்கள் மீது மோட்டார் சைக்கிள்களில் வந்த முகமூடி தரித்த இனம் தெரியாத நபர்கள் சிலர் கழிவு எண்ணெய் ஊற்றி தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.

இது தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், 'வலி வடக்கு மக்களை மீள் குடியேற்றுமாறும் தமிழர் நிலங்கள் இராணுவத்தால் தொடர்ந்து அபகறிக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு விட்டு பருத்தித்துறை, சுப்பாமடம் முகாமில் வாழும் மக்கள் மினிபஸ் ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தோம்.

யாழ். சுன்னாகம் பகுதியில் மினிபஸ் ஒன்றில் சென்றுகொண்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாதவர்கள் பஸ் மீது கல்லெறிந்து தாக்குதல் மேற்கொண்டதுடன் பஸ்சில் பயணித்த மக்கள் மீது கழிவு எண்ணெய் ஊற்றியுள்ளனர்.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மூடிய தொப்பி அணிந்தபடி வந்த ஆறு பேர் இந்த தாக்குதலை மேற்கொண்டனர்' என்று அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X