2025 மே 19, திங்கட்கிழமை

வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பாதுகாக்க 'யாழ்.மரபுரிமைக் கழகம்' அங்குரார்ப்பணம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 19 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், கிரிசன்)

யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பாதுகாப்பதற்கென 'யாழ் மாநகர மரபுரிமைக்கழகம்' என்ற புதிய கழகம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபையின் கேட்போர் கூடத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு யாழ் மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இந்த கழகத்தின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கழகத்தின் தலைவராக மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவும் செயலாளராக இரா செல்வவடிவேலும், பொருளாலராக மாநகர சபை உறுப்பினர் விஜயகாந்தனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 22 உறுப்பினர்களைக் கொண்ட கழகமாக இது செயற்படவுள்ளது. இந்தக் கழகத்தின் ஆலோசகர்காளாக வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் புஸ்பரட்ணம் ஆகியோர் செயற்படவுள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரியங்கள் கலை, கலாச்சாரம் என்பவற்றை பிரதிபலிக்கின்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பதுடன் அதனை பாராமரித்து எமது வரலாற்றை எதிர்காலச் சந்ததியினர் அறிந்துகொள்ள வழி செய்வதோடு சுற்றுலாத்துறையை விருத்தி செய்ய முடியும்  என்று இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X