2025 மே 19, திங்கட்கிழமை

'வரலாற்று ஆதாரங்களை சேகரிக்காமலும் பாதுகாக்காமலும் இருக்கின்றமை வேதனைக்குரிய விடயமாகும்'

Kogilavani   / 2012 ஜூன் 20 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

'தமிழ் மக்களுடைய வரலாறு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் கொண்ட வரலாறாகும். ஆனாலும் கூட இதனை ஆதாரப்படுத்தும் வகையில் நாம் உரிய ஆதாரங்களை சேகரித்து வைக்கவும் பாதுக்காமலும் கைவிட்ட நிலையில் இருக்கின்றமை வேதனைக்குரிய விடயமாகும்' என யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி புஸ்பரெட்னம் தெரிவித்தார்.

யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி பற்குணராசா யோகேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற யாழ்.மாநகர மரபுரிமைக் கழக அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே பேராசிரியர் கலாநிதி புஸ்பரெட்னம் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'இலங்கை தென் ஆசியாவிலேயே வரலாற்று தொடர்புகளை கொண்ட ஒரு நாடாகும். அதிலும் வட இலங்கை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றை தொடர்ச்சியாக கொண்ட பகுதியாகும்.

தென்னிலங்கையை எடுத்தால் வரலாற்றுச் சின்னங்களும் தொல் பொருள் சின்னங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலை இங்கு காணப்படவில்லை.

தென்னிலங்கையில் இருந்து வரும் தொல் பொருளியலாளர்களுடன் எமது பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கோட்டை அகழ்வு ஆராய்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

எமது பொருளாதார அரசியல் அபிவிருத்தியைக் காண வேண்டுமாக இருந்தால் எமது தொன்மையைக் காட்டவும் மரபுரிமைகளை பாதுகாக்கவும் வேண்டியது அவசியமாகும்.

தென்னிலங்கையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றுச் சின்னங்கள் மரபுகளை காட்டக் கூடிய நிலை காணப்படுகின்றது. எம்மைப் பொறுத்தவரையில் சுமார் முன்னூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய சங்கிலியன் காலத்து வரலாற்றைக் கூட பேண முடியாதவர்களாக காணப்படுகின்றோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X