2025 மே 19, திங்கட்கிழமை

கோழி பண்ணையில் பெறுமதி வாய்ந்த பொருட்கள் திருட்டு

Kogilavani   / 2012 ஜூன் 21 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                          (கிரிசன்)
மருதனார்மடம், விவசாய பாடசாலைக்கு அருகாமையில் உள்ள கோழிப் பண்ணையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், மற்றும் மூன்று கையடக்க தொலைபேசிகள் என்பவை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரவு வேளையில் பண்ணைக்குள் புகுந்த திருடர்கள் பண்ணையாளர் உறங்கிக்கொண்டிருந்த போது சுமார் ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளையும் மூன்ற கையடக்கத் தொலைபேசிகளையும் திருடிச்சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X