2025 மே 19, திங்கட்கிழமை

கொம்பையன் மயான புனரமைப்புக்கு நிதியொதுக்கீடு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 21 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் உள்ள கொம்பையன் மயானத்தை நவீன முறையில் புனரமைப்பதற்கு வடமாகாண சபையின் அபிவிருத்தி நிதியில் 20 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாநகரப் பகுதியில் உள்ள இந்த மயானத்தின் புனரமைப்பு பணிகளுக்காக 21 மில்லியன் ரூபா  தேவைப்படும் என மதிப்பீடப்பட்டிருந்த நிலையில் 10 மில்லியன் ரூபாவினை வடக்கு மாகாண சபையின் அபிவிருத்தி நிதியில்;  வழங்குவதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்திருந்தார்.  தற்போது முழுத்தொகையினையும் வழங்குவதாக  ஆளுநர் உறுதியளித்துள்ளதாக யாழ். மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

கொம்பையன் மயான புனரமைப்புக்காக கட்டிடங்கள் திணைக்களத்திற்கு திட்டவரைபுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X