2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 21 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

நோயாளர்களை கவனத்திற்கொண்டு யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை மனிதநேய மாண்புமிக்க பணியாளர்கள் என்ற ரீதியில் மேற்கொள்ளப்படவிருந்த வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக யாழ். வைத்தியர் சங்கத் தலைவர் எஸ்.நிமலன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்

யாழ். வைத்தியர் சங்க உறுப்பினரும் புற்றுநோய் வைத்திய நிபுணருமான ஜெயக்குமாரின் வீடு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களைக் கைதுசெய்யுமாறு கோரி கடந்த புதன்கிழமை யாழ். வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்

சந்தேக நபர்கள் கைதுசெய்யப்படாவிட்டால் இன்றையதினம் காலவரையற்ற பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக வைத்தியர் சங்கம் அறிவித்திருந்தது. 

இருப்பினும் நோயாளர்களின் நலன் கருதியும் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.சிறிகுகநேசன் சந்தேக நபர்களைக் கைதுசெய்ய தமக்கு கால அவகாசம் தருமாறு கோரியமையினாலும் இந்த பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும் எதிர்வரும் திங்கள் கிழமை யாழ்.வைத்திய சங்கத்தின் பிரதிநிதிகள் கூடி பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்பாக முடிவெடுக்கவுள்ளதாக யாழ்.வைத்தியர் சங்கத் தலைவர் எஸ். நிமலன் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X