2025 மே 19, திங்கட்கிழமை

இடமாற்றத்திற்கான எந்தவித கடிதங்களும் கிடைக்கவில்லை: வேம்படி பாடசாலை அதிபர்

Menaka Mookandi   / 2012 ஜூன் 21 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். வேம்படி மகளிர் பாடசாலை அதிபர் திருமதி ராஜினி முத்துக்குமார், தனக்கு கல்வி அமைச்சிடமிருந்து இடமாற்றத்திற்கான எந்தவித உத்தரவே, கடடிதமோ இதுவரை வரவில்லை எனவும் தனது இடமாற்றம் தொடர்பாக உண்மைக்கு பிறம்பான செய்திகள் வெளிவந்துள்ளன என்றும் அதில் எந்தவித உண்மையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்திக்கும் போதே அவர் இவ்விதம் கூறினார்;.

தன்னை இடமாற்றம் செய்ய வேண்டும் என சிலர் எடுக்கும் முயற்சி வீணற்றது. தயவு செய்து பாடசாலை பழைய மாணவர்கள் தற்போதைய மாணவர்களிடையே குழப்பம் விளைவிக்க வேண்டாம்.

அதிபர் இடமாற்றம், புதிய அதிபர் வருகையை பாடசாலை நிர்வாகம் ஏற்கவில்லை, புதிய அதிபர் வரும் போது பாடசாலையைப் பூட்டி வைத்திருந்துள்ளார்கள் என ஆதாரமற்ற உண்மையில்லாத செய்திகளை வெளியிடுவதால் மாணவர்கள் குழப்பமடைகின்றார்கள்.

நான் ஒரு கோரிக்கை விடுகின்றேன் ' யாழ்.வேம்படி மகளிர் பாடசாலையின் அதிபராக நான் தற்போது நிர்வகித்து வருகின்றேன். எனக்கு எந்த இடமாற்றக் கடடிதங்கள் யாரிடமிருந்தும் வரவில்லை. பாடசாலையின் வளர்சிக்காக என்னை அர்பணித்து சேவையாற்றி வருகின்றேன். என்று அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X