2025 மே 19, திங்கட்கிழமை

இமெல்டாவுக்கு எதிராக கடிதம் எழுதிய முதியவர் குற்றமற்றவர் என விடுதலை

Menaka Mookandi   / 2012 ஜூன் 21 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

பதவிக்கும் நற்பெயருக்கும் கழங்கம் ஏற்படுத்தும் விதமாக கடிதம் எழுதினார் என்று யாழ். முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமாரினால், 70 வயது முதியவர் ஒருவர் மீது தொடுக்கப்பட்டிருந்த வழக்கிலிருந்து அம்முதியவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் இமல்டாசுகுமார் அரசாங்க அதிபாராக இருந்த காலத்தில் அவர் மக்களுக்கு செய்த முறையற்ற செயற்பாடுகள் எனும் அடிப்படையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை வலியுறுத்தி கடிதமொன்றை எழுதியிருந்தார்.

இந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு தனது பெயருக்கும் பதவிக்கும் கழங்கம் விளைவித்தார் என முன்னாள் அரச அதிபர் கடந்த 2011.11.14ஆம் திகதி யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இராவணி வீதி நல்லூரைச் சேந்த முன்னாள் ஆசிரியரான கணபதி மகேஷ் என்பவருக்கு எதிராகவே யாழ்.முன்னாள் அரச அதிபர் வழக்கு தொடுத்திருந்தார்.

விசாரணைகளின் மூலம் இவர் குற்றம் அற்றவர் என நீதிமன்றம் இனம் காண்பதால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசாராச உத்தரவிட்டுள்ளார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X