2025 மே 19, திங்கட்கிழமை

வடக்கில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு உடன் நிறுத்தப்பட்ட வேண்டும்: சுவாமிநாதன் எம்.பி

Menaka Mookandi   / 2012 ஜூன் 21 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

வடக்கில் இடம்பெற்றுவரும் காணி சுவீகரிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டு, மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டீ.எம்.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அதிகரித்துவரும் வாழ்க்கைச் சுமையினால் மக்கள் பெரும் அளெசகரியங்களுக்கு முகம் கொடுத்துவருகின்ற இச்சந்தர்ப்பதில் வடக்கில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

குடாநாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் காணிகள் மற்றும் கட்டிடங்களில் இராணுவம் நிலைகொண்டுள்ளது. இராணுவம் இவ்வாறு நிலைகொண்டுள்ள நிலையில் தென்மராட்சி பிரதேசத்தில் 300 ஏக்கர் நிலத்தையும், தெல்லிப்பளை பிரதேசத்தில் 61 ஏக்கர் நிலத்தையும் கைப்பற்றுவதற்கு இராணும் முயற்சி செய்து வருவதாக எழுந்துள்ள செய்தியினால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

தற்போது யாழ் மாவட்டத்தில் வீட்டுடன் இணைந்த காணிகள் 57 இலும், 5 காணிகளிலும், அரச காணி 1 இலும், வியாபார நிறுவனம் 1 இலும் காவற்றுரையினர் குடிகொண்டுள்ளனர்.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் 716 காணிகள் உள்ளதாக கருதப்படுகிறது. இதில் வீட்டுடன் இணைந்த காணிகள் 378, காணிகள் 283, அரச காணிகள் 9, வியாபார நிறுவனங்கள் 46 என்பன இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் மொத்தம் 253 காணிகள் உள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இதில் வீட்டுடன் இணைந்த காணிகள் 123, தனியார் காணிகள் 104, அரச காணிகள் 19, வியாபார நிறுவனங்கள் 7  என்பன கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

தேசிய பாதுகாப்புக்கு எதுவித இடையூறுகளுமின்றி யாழ் குடாநாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து, பாதுகாப்புத் தரப்பு நிலைகொண்டுள்ள அனைத்து பொதுமக்கள் காணிகளையும் உரிமையாளர்களுக்கு வழங்கி தமிழ் மக்களின் வாழ்விடங்களை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும்.

வடக்கில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் தொடர்பாக சர்வதேச  மட்டத்தில் பேசப்படும் இச்சந்தர்ப்பத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, இராணுவ கெடுபிடிகளை நிறுத்தி சுமூக நிலையை வடக்கில் உருவாக்க வேண்டும்' என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X